முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » காரைக்குடியில் தினமும் 2000 பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்..!

காரைக்குடியில் தினமும் 2000 பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்..!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணிபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் தினமும் கபசுரக் குடிநீரை காய்ச்சி இலவசமாக காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை வழங்கி வருகின்றனர்.

  • 15

    காரைக்குடியில் தினமும் 2000 பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்..!

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் நாளுக்குநாள் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. தடுப்பு மருந்து இல்லாததால் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 25

    காரைக்குடியில் தினமும் 2000 பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்..!

    இந்நிலையில் கபசுர குடிநீர் அருந்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சித்தா மருத்துவத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதனால் பொதுமக்கள் ஆர்வத்துடன் கபசுரக் குடிநீரை அருந்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக அவர்கள் நாட்டு மருந்து கடைகளுக்கு அலைந்து வருகின்றனர். ஆனால் அங்கு கபசுரக் குடிநீர் கிடைக்கவில்லை.

    MORE
    GALLERIES

  • 35

    காரைக்குடியில் தினமும் 2000 பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்..!

    இதையடுத்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணிபுரத்தில் நாம் தமிழர் கட்சியினர் தினமும் கபசுரக் குடிநீரை காய்ச்சி இலவசமாக காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை வழங்கி வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 45

    காரைக்குடியில் தினமும் 2000 பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்..!

    இதனால் கபசுரக் குடிநீரை வாங்க தினமும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் சமூக இடைவெளி விட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி அருந்துகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 55

    காரைக்குடியில் தினமும் 2000 பேருக்கு கபசுரக் குடிநீர் வழங்கும் நாம் தமிழர் கட்சியினர்..!

    பெரியவர்களுக்கு 50 மி.லி, சிறியவர்களுக்கு 30 மி.லி கொடுக்கின்றனர். கபசுரக் குடிநீரை சிலர் பாத்திரங்களில் வாங்கி வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். மேலும் நாம் தமிழர் கட்சியினர் கபசுரக் குடிநீரை பாத்திரங்களில் எடுத்து சென்று காரைக்குடியின் பல்வேறு பகுதிகளில் தினந்தோறும் விநியோகித்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES