பிரேசிலில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான ரியோ டி ஜெனிரோவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. 128 அடி நீளமுள்ள ரிப்பன் வடிவிலான இந்த நினைவுச் சின்னத்தை பிரேசிலிய கட்டடக் கலைஞர் கிரிசா சான்டோஸ் (Crisa Santos) வடிவமைத்துள்ளார். கொரோனாவால் உயிரிழந்த 4,000 பேரின் பெயர்கள் இந்த நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.