இவர் வரைந்த புகைவண்டி ரயில் செல்வதற்கு அருகே குதிரையில் அமர்ந்து ஒரு நபர் செல்வது போன்ற ஓவியத்துடன் செஞ்சிலுவை சின்னம் இருந்ததால் செஞ்சிலுவை சங்கத்தினர் உதவியுடன் விற்பனை செய்தார். இந்த ஓவியத்தை கொடைக்கானல் முன்னாள் நகராட்சித் தலைவரும், சியோன் பள்ளி தாளாளர் குரியன் ஆபிரகாம் ரூ.25 ஆயிரத்திற்கு விலைக்கு வாங்கினார்.
குரியன் ஆபிரகாம் கூறுகையில், மாணவன் பிரசன்னன் தனது 13 வயதிலேயே கின்னஸ் சாதனை படைத்து கொடைக்கானலுக்கும், நமது நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். பேச்சு, ஓவியம், இசை என அனைத்திலும் திறமை பெற்றவராக உள்ளார்.இவர், ஏற்கனவே கொரோனா குறித்து விழிப்புணர்வு பாடல் பாடி அனைவரையும் கவர்ந்தவர். தற்போது ஓவியம் வரைந்துள்ளார். கொரோனா நிதிதிரட்ட இந்த ஓவியத்தை அவர் விற்கவேண்டும் என செஞ்சிலுவை சங்கத்தினர் உதவியுடன் வந்து கேட்டபோது, இந்த ஓவியத்தை ரூ.25 ஆயிரம் கொடுத்து வாங்கியுள்ளோம், என்றார்.