கடந்த 2020ம் ஆண்டு முதல் உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் தாக்கிய கொரோனா வைரஸ், இப்போது பல்வேறு பிறழ்வுகளுடன் அதிதீவிரமாக பரவி வருகின்றன. தற்போது, இந்த வைரஸில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள தடுப்பூசிகள் வந்திருந்தாலும், தொற்று ஆரம்பமான காலத்தில் இருந்தே முகக்கவசம் ஒரு உயிர்காக்கும் கருவியாக இருந்து வருகிறது. அனைத்து நாடுகளிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதவிர கைகளை கழுவுதல் மற்றும் சமூக விலகலை கடைபிடிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தியா உட்பட பல நாடுகளில் டெல்டா வேரியண்ட் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதிகாரிகள் தொடர்ந்து முகக்கவசம் அணிந்து மற்றும் கோவிட்-பொருத்தமான நடத்தையைப் பின்பற்றுமாறு மக்களை வலியுறுத்தி வருகின்றன.
எந்த மாதிரியான முகக்கவசங்களை பயன்படுத்தலாம்? நீங்கள் ஒருமுறை பயன்படுத்தி பிறகு அப்புறப்படுத்தக்கூடிய அறுவை சிகிச்சை முகக்கவசங்களை தேர்வுசெய்து கொள்ளுங்கள். ஒருவேளை உங்களது தோல் மிகவும் சென்சிட்டிவாக இருந்தால், மீண்டும் பயன்படுத்தக்கூடிய பருத்தி முகக்கவசங்களை தேர்வு செய்யவும். ஆனால் ஒருமுறை பயன்படுத்திய மாஸ்க்கை துவைக்காமல் மீண்டும் அணியக்கூடாது. அதனை நன்கு துவைத்து பயன்படுத்த வேண்டும்.