ஹோம் » போடோகல்லெரி » கொரோனா » தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்கவில்லையா? இதை செய்தால் போதும்

தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்கவில்லையா? இதை செய்தால் போதும்

சான்றிதழ் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சுகாதராரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 • 15

  தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்கவில்லையா? இதை செய்தால் போதும்

  கொரோனா தடுப்பூசி செலுத்திய சிலர் அதற்கான சான்றிதழ் இணையத்தில் கிடைக்கவில்லை என்று தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். அப்படி சான்றிதழ் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சுகாதராரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 25

  தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்கவில்லையா? இதை செய்தால் போதும்

  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்தியவர்கள் கோவின் இணையதளம் மூலம் அதற்கான தடுப்பூசி சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் வாட்ஸ் அப் மூலமாகவும் கொரோனா சான்றிதழை பெறும் வசதியை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளது.

  MORE
  GALLERIES

 • 35

  தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்கவில்லையா? இதை செய்தால் போதும்

  கொரோனா தடுப்பூசி செலுத்திய சிலர் அதனை முறையாக பதிவு செய்வதில்லை. மேலும் சிலர் ஆதார் கார்டு எண் கொடுக்கும் போது ஏற்படும் தவறுகளால் அவர்களுக்கு கொரோனா சான்றிதழ் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதுப்போன்று சிரமத்தை எதிர்கொள்பவர்கள் என்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 45

  தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்கவில்லையா? இதை செய்தால் போதும்

  அதன்படி பொதுமக்கள் எந்த தடுப்பூசி செலுத்தும் மையம் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொண்டார்களோ அங்கு புகாரை தெரிவிக்கலாம். அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை தொடர்புகொள்ளலாம்.

  MORE
  GALLERIES

 • 55

  தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்கவில்லையா? இதை செய்தால் போதும்

  மேலும் மாவட்ட கொரோனா கட்டுப்பாட்டு மையத்தின் இலவச தொலைபேசி எண்ணிலும் (1077) புகார் தெரிவிக்கலாம். அதில் தீர்வு கிடைக்காவிட்டால், 104 என்ற எண்ணை தொடர்பு கொண்டு, தொடர்புடைய உதவி மைய அதிகாரிகளின் எண்ணை பெற்று தீர்வு காணலாம் என்றுள்ளனர்.

  MORE
  GALLERIES