இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ,39,350 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 54, 966 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 783 பேர் நேற்று உயிரிழந்ததால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 35,786 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம் அமெரிக்கா, பிரேசில், பிரிட்டன், மெக்சிகோவுக்கு அடுத்து உலக அளவில் அதிகம் பேர் உயிரிழந்த 5-வது நாடாக இந்தியா உள்ளது. 10,59,000 பேர் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.