முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பின் நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பின் நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

கொரோனா தடுப்பு மருந்து இன்னும் அமலுக்கு வரவில்லை என்பதால் அதுவரை நம்மை தற்காத்துக்கொள்வது அவசியம்.

 • 18

  கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பின் நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

  கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதேசமயம் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. அப்படி குணமடைந்து வீடு திரும்புவோர் மீண்டும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..? ஏனெனில் கொரோனா தடுப்பு மருந்து இன்னும் முழுமையான அமலுக்கு வரவில்லை என்பதால் அதுவரை நம்மை தற்காத்துக்கொள்வது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 28

  கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பின் நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

  உங்களுக்கான நேரம் : கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்து நெகடிவ் என வந்தாலும் உங்களால் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சற்று கடினமாக இருக்கலாம். எனவே அதற்கான நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். மனதளவில் அழுத்தம் கொடுக்காமல் பொறுமையாக மீள திட்டமிடுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தினசரி இயல்பு வாழ்க்கைக்கு திரும்புங்கள்.

  MORE
  GALLERIES

 • 38

  கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பின் நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

  மூளைக்கு வேலை : மூளையின் ஆற்றலை சுறுசுறுப்பாக அதற்கான சில விஷயங்களை செய்யலாம். பசில் விளையாட்டு போன்ற மூளைக்கு வேலை கொடுக்கும் கேம்ஸ் விளையாடுங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள். இதனால் மூளைக்கு மட்டுமல்ல மனதிற்கும் ஆறுதல் கிடைக்கும்.

  MORE
  GALLERIES

 • 48

  கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பின் நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

  எச்சரிக்கை : மூச்சுவிடுவதில் சிரமம், தலைவலி என கொரோனா அறிகுறிகள் மீண்டும் அவ்வபோது தென்பட்டால் இன்னும் உடல் முழுமையாக குணமடையவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். எனவே வீட்டுக்குள்ளேயே இருந்து முழுமையாக குணமடைந்தபின் வெளியே செல்லுங்கள். அதேபோல் இது குறித்து மருத்துவருக்கும் தெரியப்படுத்துவது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 58

  கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பின் நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

  மாத்திரைகள் கட்டாயம் : வேறு ஏதேனும் நாள்பட்ட நோய்க்கு மாத்திரை உட்கொண்டு வருகிறீர்கள் எனில் அதை மருத்துவர் பரிந்துரைப்படி கட்டாயம் கடைபிடியுங்கள். இரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கண்கானித்துக்கொண்டே இருங்கள்.

  MORE
  GALLERIES

 • 68

  கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பின் நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

  திட்டங்கள் : முக்கியமான வேலைகள், வெளியே செல்ல வேண்டிய தேவை இருந்தாலும் அதை செய்வதற்கு உடல் முழுமையாக ஒத்துழைக்கிறதா என உறுதிபடுத்திக்கொண்டு செல்லுங்கள். இல்லையெனில் தள்ளிப்போடுவதில் தவறில்லை. உடலை கவனிப்பதே முதன்மை வேலை.

  MORE
  GALLERIES

 • 78

  கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பின் நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

  உதவி : உங்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறதெனில் நிச்சயம் மற்றவர்களை அணுகத் தயங்காதீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உதவ முன் வந்தால் கட்டாயம் உதவியை நாடுங்கள்.

  MORE
  GALLERIES

 • 88

  கொரோனாவிலிருந்து மீண்டு வந்த பின் நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

  பாதுகாப்பு : கவனம் சிறு வேலைக்காக வெளியே சென்றாலும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது, கைகளை சோப்பு போட்டு கழுவது போன்றவற்றை மறந்துவிடாதீர்கள்.

  MORE
  GALLERIES