முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனா காலத்தில் தீபாவளிக்கான ஷாப்பிங்கை எப்படி பாதுகாப்பாக மேற்கொள்வது..?

கொரோனா காலத்தில் தீபாவளிக்கான ஷாப்பிங்கை எப்படி பாதுகாப்பாக மேற்கொள்வது..?

 • 16

  கொரோனா காலத்தில் தீபாவளிக்கான ஷாப்பிங்கை எப்படி பாதுகாப்பாக மேற்கொள்வது..?

  தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் மக்கள் ஷாப்பிங் செய்ய ஆரவாரமாக களம் இறங்கியுள்ளனர். இந்த வருடம் முழுவதும் ஷாப்பிங் செய்ய முடியாமல் தவித்த ஆசைகளையெல்லாம் கொட்டித் தீர்ப்பதுபோல் மக்கள் நெரிசல் அலைமோதும் காட்சிகளை செய்திகளில் காண முடிகிறது. இவை அனைத்தும் மக்கள் கொரோனா என்னும் வைரஸை மறந்துவிட்டார்களோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறது.

  MORE
  GALLERIES

 • 26

  கொரோனா காலத்தில் தீபாவளிக்கான ஷாப்பிங்கை எப்படி பாதுகாப்பாக மேற்கொள்வது..?

  ஷாப்பிங் , பண்டிகை, கொண்டாட்டம் இப்படி எதுவாக இருந்தாலும் இன்னும் கொரோனா நம்மை விட்டு அகலவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதை மனதில் வைத்துக்கொண்டு ஷாப்பிங் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள். இல்லையெனில் ஷாப்பிங் தள்ளுபடிகளோடு கொரோனா வைரஸையும் இலவச இணைப்பாக பெற்று வருவீர்கள்.

  MORE
  GALLERIES

 • 36

  கொரோனா காலத்தில் தீபாவளிக்கான ஷாப்பிங்கை எப்படி பாதுகாப்பாக மேற்கொள்வது..?

  கூட்டம் நிறைந்த ரெஸ்டாரண்டுகளை தவிருங்கள் : ரெஸ்டாரண்ட் , ஹோட்டல்கள் எனில் அது மூடிய அமைப்பில்தான் இருக்கும். குறிப்பாக அதிக கூட்டம் இருந்தால் இடைவெளி என்பது முற்றிலுமாக இல்லாமல் போகலாம். இவ்வாறான சூழல் கொரோனாவிற்கு உகந்தது. எனவே ரெஸ்டாரண்டுகளை தவிர்ப்பது நல்லது.

  MORE
  GALLERIES

 • 46

  கொரோனா காலத்தில் தீபாவளிக்கான ஷாப்பிங்கை எப்படி பாதுகாப்பாக மேற்கொள்வது..?

  கூட்டம் நிறைந்த மார்க்கெட் : தியாகராய நகர், வண்ணாரப்பேட்டை போன்ற ஆடைகளுக்கான சந்தைகளில் இதுபோன்ற நாட்களில் கூட்டம் அதிகம் சேருவதை தவிர்ப்பதே நல்லது. இங்கு இடைவெளி என்பதை பார்ப்பதே அரிது.

  MORE
  GALLERIES

 • 56

  கொரோனா காலத்தில் தீபாவளிக்கான ஷாப்பிங்கை எப்படி பாதுகாப்பாக மேற்கொள்வது..?

  பொது போக்குவரத்தை தவிர்க்கலாம் : பண்டிகை நாட்களில் மக்கள் அதிகம் வெளியே வரக்கூடும். இந்த சமயத்தில் பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தலாம். எனவே இதுபோன்ற நேரங்களில் பொது போக்குவரத்தை தவிர்ப்பதால் சமூக இடைவெளியைக் கடைபிடிக்கலாம். எனவே தனி வாகனம் பயன்படுத்த முயற்சிக்கலாம்.

  MORE
  GALLERIES

 • 66

  கொரோனா காலத்தில் தீபாவளிக்கான ஷாப்பிங்கை எப்படி பாதுகாப்பாக மேற்கொள்வது..?

  சிறந்த வழி என்ன..? : இவற்றிற்கெல்லாம் சிறந்த வழி வீட்டிலேயே சமைத்து ஆரோக்கியமாக சாப்பிடலாம். ஆன்லைனில் ஆடைகளை ஆர்டர் செய்துகொள்ளலாம். பண்டிகையில் வெளியே செல்லாமல் வீட்டிலேயே புது புது படங்கள் பார்த்து மகிழ்ச்சியை குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளலாம். இதனால் பாதுகாப்பான தீபாவளி பண்டிகைக்கு வழிவகுக்கலாம்.

  MORE
  GALLERIES