முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » ஹாங்காங்கில் நாய்க்கு கொரோனா பாதிப்பு: மனிதனிடமிருந்து பரவியது கண்டுபிடிப்பு

ஹாங்காங்கில் நாய்க்கு கொரோனா பாதிப்பு: மனிதனிடமிருந்து பரவியது கண்டுபிடிப்பு

ஹாங்காங் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் வளர்ப்பு நாய் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது.

  • 17

    ஹாங்காங்கில் நாய்க்கு கொரோனா பாதிப்பு: மனிதனிடமிருந்து பரவியது கண்டுபிடிப்பு

    ஹாங்காங் நாட்டில் கொரோனா பாதித்த நபரிடமிருந்து அவர் வளர்த்த நாய்க்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. முதன்முதலாக மனிதர்களிடமிருந்து விலங்குக்கு கொரோனா பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 27

    ஹாங்காங்கில் நாய்க்கு கொரோனா பாதிப்பு: மனிதனிடமிருந்து பரவியது கண்டுபிடிப்பு

    சீனாவின் ஊஹான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையை அச்சுறுத்தி வருகிறது. இதுவரையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் சீனாவில் மட்டும் 3,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 37

    ஹாங்காங்கில் நாய்க்கு கொரோனா பாதிப்பு: மனிதனிடமிருந்து பரவியது கண்டுபிடிப்பு

    ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த இரு தினங்களாக கொரோனாவின் தாக்கம் வேகமாக அதிகரித்துவருகிறது.

    MORE
    GALLERIES

  • 47

    ஹாங்காங்கில் நாய்க்கு கொரோனா பாதிப்பு: மனிதனிடமிருந்து பரவியது கண்டுபிடிப்பு

    இந்தநிலையில், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு கொரோனா பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹாங்காங் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் வளர்ப்பு நாய் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தது.

    MORE
    GALLERIES

  • 57

    ஹாங்காங்கில் நாய்க்கு கொரோனா பாதிப்பு: மனிதனிடமிருந்து பரவியது கண்டுபிடிப்பு

    அந்த நாயை கடந்த நான்கு நாள்களாக சோதனை செய்ததில் அந்த நாய்க்கு கொரோனா பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.  தூய்மைக்கேடான இடத்திலிருந்து மூக்கு மற்றும் வாய் வழியாக நாய்க்கு பரவியுள்ளது. தற்போது அந்த நாய் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 67

    ஹாங்காங்கில் நாய்க்கு கொரோனா பாதிப்பு: மனிதனிடமிருந்து பரவியது கண்டுபிடிப்பு

    பின்னர், ஹாங்காங் பல்கலைக்கழகம், விலங்குகளுக்கான உலக சுகாதார அமைப்பின் நிபுணர்களிடம் ஆலோசனை செய்ததில் அவர்கள் நாய்க்கு கொரோனா பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 77

    ஹாங்காங்கில் நாய்க்கு கொரோனா பாதிப்பு: மனிதனிடமிருந்து பரவியது கண்டுபிடிப்பு

    இருப்பினும், குறைந்த அளவிலான தொற்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் முழுவதுமாக நீங்கும் வரை நாய் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES