இந்தியாவின் தங்க இறக்குமதி, 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ள போது தங்கத்தின் விலை மட்டும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்போதைய நிலையில் தங்கம் விலை உயர்விற்கு முக்கிய காரணம் கொரோனா வைரஸ் தான்.... உலக அளவில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு பொருளாதாரம் எப்படி இருக்கும் என்ற அச்சம். பாதுகாப்பான முதலீட்டை நோக்கி முதலீட்டாளர்களை நகர்த்துகிறது.
தங்கத்தின் விலை சர்வதேச அளவில், பல்வேறு காரணிகளை கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படி, கொரோனா ஏற்படுத்திய சர்வதேச தாக்கம் தங்கத்தின் விலையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால், சர்வதேச அளவில் என்ன விலைக்கு தங்கம் விற்பனை செய்யப்படுகிறதோ, அதே விலைக்கு தான் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுகிறது.