பிரான்சின் பாரிஸில் ஊரடங்கால் மூடப்பட்ட ஈபிள் டவர் 104 நாட்களுக்கு பின் பார்வையாளர்களுக்காக திறக்கப்பட்டது. லிப்ட் பராமரிப்பு பணி நடைபெறுவதால் படிக்கட்டுகள் மூலம் முதல் இரு தளங்களுக்குச் செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. முதல் நாளில் பார்வையாளர்களை மேளதாளத்துடன் வரவேற்றனர். குறைந்த அளவிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படும் நிலையில், அனைவரும் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போருக்கு பின்பு அதிக நாட்கள் ஈபிள் டவர் மூடப்பட்டிருந்தது இதுவே முதல் முறையாகும். பாரிஸில் 104 நாட்களுக்கு பின் ஈபிள் டவர் திறப்பு