அதன்படி, கிஷான் கிரெடிட் கார்டு மூலம் இரண்டரை கோடி விவசாயிகளுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் என தெரிவித்தார். நபார்டு மூலம் கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதலாக 30ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவதாகவும், இதன் மூலம் 3 கோடி விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்க முடியும் என அவர் கூறினார்.