நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டதில் இருந்து, பொதுப் போக்குவரத்துக்கான பயண விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சமயத்தில் ரயில் பயணத்தின் போது கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த டிக்கெட் முன்பதிவு செய்வதிலிருந்து, இருக்கைகளில் அமரும் வரை அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு தளர்வுகளை மத்திய அரசு எளிதாக்கி வருவதால், மக்கள் தனிப்பட்ட மற்றும் வணிக காரணங்களுக்காக தற்போது பயணம் செய்து வருகின்றனர். ரயிலில் பயணம் செய்வதற்கு வழக்கத்தை விட நிறைய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தேவை. குறிப்பாக ஒரு நாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் ரயில் பயணம் செய்யும் போது நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
2. ரயிலில் கேட்டரிங் சேவை இனி கிடைக்காது. பேக் செய்யப்பட்ட பொருட்கள் , சாப்பிடத் தயாராக உள்ள சில உணவுகள், பாட்டில் குடிநீர், தேநீர், காபி மற்றும் பானங்கள் ஆகியவை மட்டுமே கிடைக்கும். மேலும் வரையறுக்கப்பட்ட ரயில்களிலும், ஸ்டேஷன் கேட்டரிங் யூனிட்களிலும் இவைகளை கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். அரசிடம் இருந்து மறு அறிவிப்பு ஒரு வரை ரயிலில் உணவுகள் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்கள் சொந்த உணவு மற்றும் குடிநீரை எடுத்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.
4. பயணம் செய்யும் ஒவ்வொருவரும் ரயில் நிலையத்திற்குள் நுழைவது முதல் பயணத்தின் இறுதி வரை எப்போதும் முகக்கவசங்களை அணிந்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில் நிலையத்தில் வெப்பத் திரையிடல் மற்றும் டிக்கெட் சோதனைக்கான நீண்ட வரிசையை தவிர்க்க பயணிகள் முன்கூட்டியே நிலையத்திற்கு வந்தடைய அறிவுறுத்தப்படுகிறார்கள். முக்கியமாக நோய் அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.