இந்தியாவில் சிறுவர்களுக்கான தடுப்பூசி சோதனையில் பாரத் பயோடெக் நிறுவனமும், ஜைடஸ் நிறுவனமும் ஈடுபட்டுள்ளன. கோவேக்சின் தடுப்பூசி 2 முதல் 18 வயதுள்ளோர் 525 பேரிடமும், ஜைடஸ் நிறுவனத்தின், ஜைகோவ்-D மருந்து 12 முதல் 18 வயதுக்குட்பட்ட ஆயிரம் பேர் மீதும் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.