தமிழகத்தில் இன்று 5996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த கொரோனா பாதிப்பு 4,09,238 ஆக அதிகரித்துள்ளது சென்னையில் இன்று 1296 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 16,103 பேருக்கு இதுவரை சென்னையில் தொற்று கண்டறியப்பட்டுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் 5752 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 3,49,682 ஆக உயர்ந்துள்ளது தமிழகத்தில் தினசரி நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்துவரும் நிலையில், இன்றும் 102 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்த உயிரிழப்பு 7050 ஆக அதிகரித்துள்ளது தமிழகத்தில் தொடர்ந்து தினசரி கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்படுவது அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது