உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.92 கோடியை நெருங்கியுள்ளது மேலும் 3,903 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 9,27,000-ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் புதிதாக தொற்று ஏற்பட்ட 31,000 பேர் உட்பட, 67,8,000 பேர் இதுவரை பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பிரேசிலில் பாதிப்பு 43,30,000-ஆகவும், ரஷ்யாவில் 10,62,000-ஆகவும் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் 2.10 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.