முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » CoronaVirus : கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரலைத் தவிர வேறெந்த உறுப்புகள் பாதிக்கப்படலாம்..?

CoronaVirus : கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரலைத் தவிர வேறெந்த உறுப்புகள் பாதிக்கப்படலாம்..?

மரபணு மாற்றம் அடைந்த உருமாறிய கொரோனா நுரையீரலைப்போல் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

 • 19

  CoronaVirus : கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரலைத் தவிர வேறெந்த உறுப்புகள் பாதிக்கப்படலாம்..?

  கொரோனா வைரஸின் 2வது அலை இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை தேடி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை சுவாசப் பிரச்சனை மற்றும் காய்ச்சல் ஆகிய அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம் என நிபுணர்கள் கூறி வந்த நிலையில், மரபணு மாற்றம் அடைந்த உருமாறிய கொரோனா நுரையீரலைப்போல் மற்ற உறுப்புகளையும் பாதிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 29

  CoronaVirus : கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரலைத் தவிர வேறெந்த உறுப்புகள் பாதிக்கப்படலாம்..?

  சுவாசப் பிரச்சனை : SARs-COV-2 வைரஸ் சுவாசப் பாதைக்குள் நுழைந்து இருமல், மூச்சு இழப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தி நுரையீரலை பாதிக்கிறது. உடலில் இருக்கும் ஆரோக்கியமான செல்களை தாக்கும் இந்த வைரஸ், அதன் வீரியத்தை வேகமாக அதிகரிக்கிறது. இதன்விளைவாக குறுகிய நேரத்தில் நுரையீரலில் இருக்கும் திசுக்களை பாதித்து பாதிக்கப்பட்டவருக்கு உடல் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன. மேலும், நுரையீரலை மட்டும் நேரடியாக தாக்குவதோடு இல்லாமல் மற்ற உறுப்புகளையும் கோவிட் வைரஸ் தாக்குவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 39

  CoronaVirus : கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரலைத் தவிர வேறெந்த உறுப்புகள் பாதிக்கப்படலாம்..?

  உடலில் மற்ற பகுதிகளில் அழற்சியை ஏற்படுத்தும் SARs-COV-2, நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்குகிறது. ஏற்கனவே, நீரிழிவு மற்றும் ஹைபர்டென்சன் நோயாளிகளாக இருந்தால் அதன் பாதிப்பை அதிகப்படுத்துகின்றன. இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது, உடலில் தோன்றும் அறிகுறிகளை மட்டும் கவனிக்காமல், ஏற்கனவே இருக்கும் நோயின் தன்மையையும் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 49

  CoronaVirus : கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரலைத் தவிர வேறெந்த உறுப்புகள் பாதிக்கப்படலாம்..?

  இதயம் : ஏற்கனவே இதயம் சார்ந்த பிரச்சனைகளுக்கு மருத்துவ சிகிச்சையை எடுத்து வருவபவர்களை கோவிட் வைரஸ் தாக்கும்போது, அந்தப் பிரச்சனையின் வீரியத்தை அதிகமாக்குகின்றன. இதய தசைகளில் அழற்சியை ஏற்படுத்தும் கோவிட் வைரஸ், பாதிக்கப்பட்டவரின் உடலை ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

  MORE
  GALLERIES

 • 59

  CoronaVirus : கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரலைத் தவிர வேறெந்த உறுப்புகள் பாதிக்கப்படலாம்..?

  ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வின்படி, கோவிட் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் ரத்தத்தில் இருக்கும் ட்ரோபோனின் என்சைம் வழக்கத்துக்கு மாறாக அதிகரித்திருப்பதாகவும், அவர்களில் மூன்றில் ஒருவருக்கு ஏற்கனவே CVD எனப்படும் இதயப் பிரச்சனைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கு திடீர் படபடப்பு, மார்பு வலி, நாட்பட்ட சோர்வு போன்றவை அறிகுறிகளாக தென்படும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 69

  CoronaVirus : கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரலைத் தவிர வேறெந்த உறுப்புகள் பாதிக்கப்படலாம்..?

  நரம்பியல் பாதிப்பு : முந்தை ஆய்வுகளின்படி, கோவிட் வைரஸ் பாதிக்கப்பட்ட பலருக்கும் குழப்பமான மனநிலை, தலைச்சுற்றல், மங்கிய கண் பார்வை போன்ற அறிகுறிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. JAMA நியூராலஜி நடத்திய ஆய்வில், வுகானில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 214 பேரில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு நரம்பியல் சார்ந்த பிரச்சனைகள் இருந்ததாக தெரிவித்துள்ளது. அவற்றில் முக்கியமாக பக்கவாதம், வலிப்பு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களாவுக் இருந்ததாகவும், அல்சைமர் மற்றும் பார்கின்சன் நோய் அதிகரிப்பதற்கும் கோவிட் வைரஸ் பாதிப்புக்கும் தொடர்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 79

  CoronaVirus : கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரலைத் தவிர வேறெந்த உறுப்புகள் பாதிக்கப்படலாம்..?

  சிறுநீரக பாதிப்பு : கொரோனா வைரஸ் பாதிப்பின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக சிறுநீரக பாதிப்பும் உள்ளது. புரோட்டினைக் கொண்டிருக்கும் ஏ.சி.இ 2 ரெசிப்டர்ஸ் செல்களை சார்ஸ் கோவிட் 2 பாதிப்பதாக தெரிவிக்கும் ஆய்வாளர்கள், அதன்தொடர்ச்சியாக சிறுநீரகத்தை தாக்குவதாக கூறியுள்ளனர். சிறுநீரகத்தில் கொரோனா வைரஸ் நுழைந்துவிட்டால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதாகவும், ஆரோக்கியமான திசுக்களை அழிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இந்த பாதிப்பு ஏற்பட்டவுடன் குறைவான சிறுநீரக வெளியேற்றம் அல்லது அடிக்கடி சிறுநீர் கழித்தல் ஆகிய பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஒரு கட்டத்தில் சிறுநீரகத்தை செயழிக்கவும் செய்யும்.

  MORE
  GALLERIES

 • 89

  CoronaVirus : கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரலைத் தவிர வேறெந்த உறுப்புகள் பாதிக்கப்படலாம்..?

  ரத்த உறைவு : உடலின் பல்வேறு பகுதிகளை பாதிக்கும் கோவிட் வைரஸ் ரத்த உறைவு மற்றும் ரத்த கட்டிகளை உருவாக்குவதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஆய்வில் இருந்தாலும், கோவிட் வைரஸ் பாதிக்கப்பட்ட பலரும் இந்த பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர். அதாவது சார்ஸ் கோவிட் 2 வைரஸ், ஏ.சி.இ 2 புரத அமைப்புடன் இணைந்து ரத்த உறைவைத் தூண்டும் செல்களை உருவாக்குவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நுரையீரல் மட்டுமல்லாது கை, கால்களிலும் இந்த பிரச்சனைகள் உருவாக்கப்படுதாக தெரிவிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 99

  CoronaVirus : கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு நுரையீரலைத் தவிர வேறெந்த உறுப்புகள் பாதிக்கப்படலாம்..?

  கோவிட் வைரஸில் இருந்து மீண்டவர்களுக்கு : கோவிட் வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு வந்தாலும், ஒரு சிலருக்கு வாழ்நாள் நோய் பாதிப்புகளை உருவாக்கிச் செல்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கோவிட் வைரஸ் பாதிப்பின்போது நுரையீரல், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்படும் பக்கவிளைவுகளில் இருந்து முழுமையாக குணமடைய சில நாட்கள் தேவைப்படும் என கூறுகின்றனர். பலருக்கு குணப்படுத்த முடியாத நோயாகவும் மாறிவிடுதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

  MORE
  GALLERIES