சென்னை தலைமை செயலகத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தலைமை செயலகத்துக்கு வந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
2/ 6
இதற்காக சிறப்பு மருத்துவக் குழு அவையின் வாயில் எண் 4 அருகே நிறுத்திவைக்கப்பட்டுள்ளது
3/ 6
சட்டப்பேரவையில் இன்று உள்ளாட்சி துறை மானிய கோரிக்கை நடைபெறும் நிலையில், மாநகராட்சி சுகாதாரத்துறையை சேர்ந்த மருத்துவ குழுவினர், INFRARED thermometer கொண்டு பரிசோதனை செய்தனர்.
4/ 6
இதில் தலைமை செயலகம் வந்த எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
5/ 6
மேலும் கை கழுவும் முறை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.
6/ 6
ஏற்கனவே கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த வாரம் தலைமை செயலகம் வளாகம் முழுவதும் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.