முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » துணை அதிபர் உட்பட 245 பேருக்கு பாதிப்பு : கொரோனாவுடன் போராடுகிறது ஈரான்..!

துணை அதிபர் உட்பட 245 பேருக்கு பாதிப்பு : கொரோனாவுடன் போராடுகிறது ஈரான்..!

 • 18

  துணை அதிபர் உட்பட 245 பேருக்கு பாதிப்பு : கொரோனாவுடன் போராடுகிறது ஈரான்..!

  ஈரானில் துணை அதிபர் உள்பட 245 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தங்களை மீட்டு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அங்கு மீன்பிடித் தொழில் செய்யும் தமிழர்கள், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 28

  துணை அதிபர் உட்பட 245 பேருக்கு பாதிப்பு : கொரோனாவுடன் போராடுகிறது ஈரான்..!

  சீனாவைத் தொடர்ந்து ஈரான், தென்கொரியா, இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஈரானில் துணை அதிபர்களில் ஒருவரான Masoumeh Ebtekar கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுகாதாரத்துறை துணை அமைச்சரான இராஜ் ஹரிர்ஜி மற்றும் ஒரு எம்.பிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. ( கோப்பு படம் )

  MORE
  GALLERIES

 • 38

  துணை அதிபர் உட்பட 245 பேருக்கு பாதிப்பு : கொரோனாவுடன் போராடுகிறது ஈரான்..!

  இந்நிலையில், ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. சீனாவைத் தவிர்த்த மற்ற நாடுகளில் ஏற்பட்ட உயிரிழப்புகளில் இதுவே அதிகமாகும். ( கோப்பு படம் )

  MORE
  GALLERIES

 • 48

  துணை அதிபர் உட்பட 245 பேருக்கு பாதிப்பு : கொரோனாவுடன் போராடுகிறது ஈரான்..!

  ஷியா பிரிவினரின் புனிதநகரமாக கருதப்படும் Qom-இல் இருந்து கொரோனா பரவத் தொடங்கியதாக கருதப்படும் நிலையில், நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெறும் தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. ( கோப்பு படம் )

  MORE
  GALLERIES

 • 58

  துணை அதிபர் உட்பட 245 பேருக்கு பாதிப்பு : கொரோனாவுடன் போராடுகிறது ஈரான்..!

  சீனர்கள் ஈரானுக்கு வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சவுதி அரேபியாவில் கொரோனா பரவுவதைத் தடுக்கும் வகையில் புனித நகரங்களான மெக்கா மற்றும் காபாவிற்கு வெளிநாட்டினர் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ( கோப்பு படம் )

  MORE
  GALLERIES

 • 68

  துணை அதிபர் உட்பட 245 பேருக்கு பாதிப்பு : கொரோனாவுடன் போராடுகிறது ஈரான்..!

  வருடாந்திர ஹஜ் பயணம் சில மாதங்களில் தொடங்க உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ( கோப்பு படம் )

  MORE
  GALLERIES

 • 78

  துணை அதிபர் உட்பட 245 பேருக்கு பாதிப்பு : கொரோனாவுடன் போராடுகிறது ஈரான்..!

  இதனிடையே முன்னெச்சரிக்கையாக ஈரானில் இருந்து இந்தியாவிற்கு விமானங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மஹான் ஏர், ஈரான் ஏர் ஆகிய இரு விமான நிறுவனங்கள் மும்பை மற்றும் டெல்லிக்கு விமானங்களை இயக்கி வந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ( கோப்பு படம் )

  MORE
  GALLERIES

 • 88

  துணை அதிபர் உட்பட 245 பேருக்கு பாதிப்பு : கொரோனாவுடன் போராடுகிறது ஈரான்..!

  ஈரானில் இருந்து பல நாடுகளுக்கும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளர்கள் 800 பேர் அங்குள்ள தீவுகளில் தவித்து வருகின்றனர். கீஸ் தீவு, சிங்கா தீவு உள்ளிட்ட 4 தீவுகளில் தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். ( கோப்பு படம் )

  MORE
  GALLERIES