முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கோவிட்-19 டெஸ்ட் செய்து கொள்ள போகும் குழந்தைகளை எப்படி தயார் செய்வது?

கோவிட்-19 டெஸ்ட் செய்து கொள்ள போகும் குழந்தைகளை எப்படி தயார் செய்வது?

பல சந்தர்ப்பங்களில் குழந்தைகளுக்கு பெற்றோரிடமிருந்தோ அல்லது குடும்ப உறுப்பினர்களிடமிருந்தோ தொற்று பரவலாம். ஆயினும்கூட, குழந்தைகளிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தால் சோதிக்க வேண்டும் என்பது முக்கியம்.

 • 18

  கோவிட்-19 டெஸ்ட் செய்து கொள்ள போகும் குழந்தைகளை எப்படி தயார் செய்வது?

  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால் பாதிப்புகள் மின்னல் வேகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. முதல் அலையை விட உக்கிரமாக இருக்கும் இரண்டாம் அலையில் வயது வித்தியாசம் இன்றி சிறு குழந்தைகள் கூட பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டாம் அலையே எப்போது ஓய போகிறது என்பது ததெரியாத நிலையில், கொரோனா தொற்றின் மூன்றாம் அலையை சமாளிக்க நாடு தயாராக வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

  MORE
  GALLERIES

 • 28

  கோவிட்-19 டெஸ்ட் செய்து கொள்ள போகும் குழந்தைகளை எப்படி தயார் செய்வது?

  தொற்றின் இரண்டாம் அலையில் 5 முதல் 15 வயதிற்குட்பட்டவர்கள் பாதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பல சந்தர்ப்பங்களில் குழந்தைகளுக்கு பெற்றோரிடமிருந்தோ அல்லது குடும்ப உறுப்பினர்களிடமிருந்தோ தொற்று பரவலாம். ஆயினும்கூட, குழந்தைகளிடம் தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தால் சோதிக்க வேண்டும் என்பது முக்கியம்.

  MORE
  GALLERIES

 • 38

  கோவிட்-19 டெஸ்ட் செய்து கொள்ள போகும் குழந்தைகளை எப்படி தயார் செய்வது?

  Nasal swab test மன அழுத்தத்தை ஏற்படுத்தும் : குழந்தைகளிடம் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்பட்டால் சோதிப்பது அவசியம். இருப்பினும், RT-PCR சோதனை அல்லது மூக்கில் எடுக்கப்படும் ஸ்வாப் டெஸ்ட் (Nasal swab test) குழந்தைகளுக்கு செய்யக்கூடிய எளிதான சோதனைகள் அல்ல. இவை அவர்களுக்கு சிக்கலாக இருக்க கூடும். நிறைய தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட வேண்டும். மூக்கில் ஸ்வாப் டெஸ்ட் எடுக்கப் பயன்படுத்தப்படும் உபகரணம் பிளாஸ்டிக்கால் ஆன நீண்ட, மெல்லிய தண்டு போல இருக்கும். இதை சற்று வேகமாக மூக்கினுள் விட்டால்கூட காயங்கள் ஏற்படலாம். இவை அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்படும் சிறு குழந்தைகளுக்கு மிகவும் பயமாக இருக்கும். இது போன்ற சூழ்நிலையில் குழந்தைகளுக்கு ஏற்படும் பயத்தை தணித்து அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை போக்குவது முக்கியம்.

  MORE
  GALLERIES

 • 48

  கோவிட்-19 டெஸ்ட் செய்து கொள்ள போகும் குழந்தைகளை எப்படி தயார் செய்வது?

  முன்கூட்டியே நன்கு தயார் செய்ய வேண்டும் : தொற்று நோய் தொடங்கியதிலிருந்தே குழந்தை உளவியலாளர்கள் மற்றும் வல்லுநர்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் கொரோனா தொடர்பான செய்திகளை குழந்தைகளுக்கு தெரியாமல் மறைக்க வேண்டாம். தொற்று குறித்த விழிப்புணர்வை அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அறிகுறிகள் தெரியும் குழந்தைகளை இதே முறைகள் தான் கையாள வேண்டும். டெஸ்ட் குறித்து முன்பே கூறி அவர்களை தயார்படுத்துவது அவர்களுக்கு ஏற்படும் பயத்தை குறைக்கும். அவர்களை தயார்படுத்தும். எனவே எதற்காக டெஸ்ட் செய்ய போகிறோம், ஏன் இது தேவை, ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் எப்படி இருப்பார்கள், எப்படி டெஸ்ட் எடுப்பார்கள் என்று எடுத்து சொல்ல வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 58

  கோவிட்-19 டெஸ்ட் செய்து கொள்ள போகும் குழந்தைகளை எப்படி தயார் செய்வது?

  அமைதியாக இருக்க வேண்டும் : நினைவில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பிள்ளைகள் முன் பெற்றோர்கள் தங்கள் கவலையை காட்ட கூடாது. பெற்றோர் கவலைப்படுவதை பார்க்கும் குழந்தைகள் மேலும் கவலைப்படுவார்கள். எனவே எவ்வளவு கவலைப்பட்டாலும் அதை குழந்தைகள் முன் வெளிக்காட்டாமல் பெற்றோர்கள் அமைதியாக ,உறுதியாக இருக்க வேண்டும். இப்போதுள்ள நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, அறிகுறிகளைக் காண்பிக்கும் குழந்தையின் எந்தவொரு பெற்றோரும் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு பதற்றமின்றி இருப்பது அவசியம்.

  MORE
  GALLERIES

 • 68

  கோவிட்-19 டெஸ்ட் செய்து கொள்ள போகும் குழந்தைகளை எப்படி தயார் செய்வது?

  திசைதிருப்பலாம் : அறிகுறிகளை உடைய குழந்தைகள் டெஸ்ட் எடுக்கும் போது கவலையடையவோ, அழவோ வாய்ப்புள்ளது. இது போன்ற ஒரு நேரத்தில் வலி, மன அழுத்தத்திலிருந்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்ப அவர்களுக்கு பிடித்த பொம்மைகள், வீடியோ காட்டும் செயலில் பெற்றோர்கள் ஈடுபடலாம். அவர்களின் கையை பிடித்து கொள்வது, அவர்களுக்கு உறுதியளிப்பது கூட உதவும்.

  MORE
  GALLERIES

 • 78

  கோவிட்-19 டெஸ்ட் செய்து கொள்ள போகும் குழந்தைகளை எப்படி தயார் செய்வது?

  வசதியாக உட்கார வைக்கவும் : கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது அல்லது நெறிமுறைகளை பின்பற்ற கட்டாயப்படுத்துவது குழந்தைகளுக்கு வசதியாக இருக்காது. எனவே குழந்தைகள் பக்கத்தில் உட்கார்ந்து அவர்களை ஆதரவாக பிடித்து கொள்வது, டெஸ்ட் முடிந்த பின் அவர்களை கட்டிப்பிடித்து ஆறுதல் கூறுவது உள்ளிட்ட விஷயங்களில் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.

  MORE
  GALLERIES

 • 88

  கோவிட்-19 டெஸ்ட் செய்து கொள்ள போகும் குழந்தைகளை எப்படி தயார் செய்வது?

  புகழ்ந்து பேசலாம் : தொற்று நோய் அபாயத்தில் இருக்கும் ஒரு குழந்தையின் மனநிலையை அமைதியாக வைத்திருப்பது என்பது எளிதல்ல. பெற்றோர்கள் உணர்வுப்பூர்வமாக இருக்க வேண்டிய அதே நேரத்தில் நேர்மறையாக இருப்பதும் அவசியம். தொற்றை கண்டறியும் சோதனை செய்வதற்கு முன் சோதனைக்கு ஒத்துழைக்க போவதற்கும், சோதனைக்கு பின் ஒத்துழைத்ததற்காகவும் அல்லது தனிமைப்படுத்தப்பட்ட விதிகளை பின்பற்றுவதற்காகவும் அவர்களை பாராட்டி, புகழ்ந்து பேசலாம். அன்பான பாராட்டு வார்த்தைகள் குழந்தைகளை அமைதிப்படுத்தி மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.

  MORE
  GALLERIES