கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய உடனே விலங்குகளில் பாதிப்புகளும் ஏற்படத் தொடங்கின. ஹாங்காங்கில் பூனைகள், நியூயார்க் நகர மிருகக் காட்சிசாலையில் புலிகள் மற்றும் நெதர்லாந்தில் உள்ள பண்ணைகளில் மின்க்குகள் என பல உயிரினங்களுக்கும் தொற்று ஏற்பட்டது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் பாதித்துள்ளது. வைரஸுக்கு எதிரான, பொதுவான மற்றும் பயனுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியை பராமரிப்பதாகும்.
The Daily Mail-இல் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், சுவிட்சர்லாந்தில் உள்ள சுகாதார வல்லுநர்கள், கொரோனா என்னும் கொடிய வைரஸை தவிர்ப்பதற்காக செல்லப்பிராணிகளை சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். நாய்கள் இரண்டு மீட்டர் இடைவெளியை பராமரிக்கவும், பூனைகளை வீட்டிற்குள் வைத்திருக்கவும் பரிந்துரைத்துள்ளனர்.
ஆனால் இன்றுவரை, செல்லப்பிராணிகளிடமிருந்து அவற்றின் உரிமையாளர்களுக்கு பரவும் பாதிப்புகள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதற்கிடையில், உள்ளூர் சுவிஸ் செய்தித்தாள் ஒன்று நாட்டின் மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகம் (FSVO) மனிதர்களுக்கு விலங்கு தொற்று அபாயங்கள் குறித்து ஆராய்ச்சி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.