கப்பலில் பரிதவிக்கும் ஜப்பானியர்கள்... 61 பேருக்கு கொரோனா உறுதி...!
1/ 9
சீனாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் சென்று கொண்டுள்ளது. நேற்று இதன் தீவிரம் அதிகரித்து, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 630-க் கடந்துள்ளது. 30,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2/ 9
இதனிடையே ஜப்பானின் சொகுசு கப்பலான டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணம் செய்த பயணிகளில் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.
3/ 9
இந்த தகவலை சர்வதேச செய்தி நிறுவனமான ஏ. எஃப்.பி (Agence France-Presse international news agency) நிறுவனம் வெளியிட்டுள்ளது.
4/ 9
கடந்த மாதம் 20-ம் தேதி ஜப்பானின் யோகோஹாமாவில் இருந்து சீனாவில் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கிற்கு டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பல் பயணித்தது.
5/ 9
இதில் பயணிகள் மற்றும் கப்பலில் பணியாற்றும் ஊழியர்கள் என 3,745 பேர் பயணம் செய்தனர்.
6/ 9
அதன் பின்னர் அந்த சொகுசு கப்பல் ஹாங்காங்கில் இருந்து மீண்டும் ஜப்பானுக்கு புறப்பட்டது.
7/ 9
இதற்கிடையே, கப்பலில் பயணித்த 80 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
8/ 9
பின்னர் ஜப்பான் அதிகாரிகள் கப்பலை தனிமை படுத்தி ஜப்பானின் யோகாஹாமா துறைமுகத்திற்குள் விட மறுத்தனர்.
9/ 9
தற்போது கப்பலில் உள்ள 61 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக சர்வதேச செய்தி நிறுவனமான ஏ. எஃப்.பி (Agence France-Presse international news agency) நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
19