பொருளாதாரத்தை மீட்டெடுக்க பிரதமர் மோடி 20 லட்சம் கோடி ரூபாய் அறிவித்திருக்கும் நிலையில், இந்தியாவைவிட மற்ற நாடுகள் கூடுதலாக நிதி ஒதுக்கியுள்ளன. அமெரிக்கா தற்போது வரை 205 லட்சம் கோடியை சிறப்பு நிதியாக அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் நிதியை அறிவிக்க தொடர்ந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஜப்பானை பொறுத்தவரை, கொரோனா சிறப்பு நிதியாக 83 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. கொரோனாவால் ஏற்பட்டு வரும் பாதிப்பை சரி செய்ய ஜெர்மனி 62 லட்சம் கோடியும், இத்தாலி 61 லட்சம் கோடியும் அறிவித்துள்ளன. அவசர நிதி தேவைக்காக பிரிட்டன் அரசு 10 லட்சம் கோடியை ஒதுக்கியுள்ளதுடன், 30 லட்சம் கோடி ரூபாய் வரை வரி மற்றும் கடன் சலுகை வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் எல்லாம் இணைந்து சுமார் 226 லட்சம் கோடி ரூபாயை கொரோனா கால அவசர நிதியாக அறிவித்துள்ளன. ஜி 20 கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கொரோனா பாதிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள விகிதம் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கொரோனா பாதிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ள விகிதம்