முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.... முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன..?

கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.... முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன..?

கோவையில் கொரொனா  தொற்று அதிகரித்து வரும் நிலையில் ,மாநகராட்சி சார்பில்  நடமாடும் பரிசோதனை மைய வாகனங்கள் தயார் செய்யும் பணி  நடைபெற்று வருகின்றது. தன்னார்வ அமைப்புகளும் நடமாடும் பரிசோதனை மைய வாகனங்களை மாநகராட்சி நிர்வாகத்திற்கு வழங்கி வருகின்றனர்.

  • 15

    கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.... முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன..?

    கோவை மாவட்டத்தில் கொரொனா  தொற்று வேகமாக பரவி வருகின்றது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  22 ஆயிரம் பேரை கடந்துள்ளது. தொற்றை கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள் ஒவ்வொரு பகுதியாக நடத்தப்பட்டு வருகின்றது.

    MORE
    GALLERIES

  • 25

    கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.... முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன..?

    இந்நிலையில் கொரொனா தொற்றை கண்டறிய நடமாடும் பரிசோதனை மையங்களை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வருகின்றது. முதல்கட்டமாக 40 நடமாடும் பரிசோதனை மையங்கள் மாநகராட்சி சார்பில் வடிவமைககும்  பணிகள் நடைபெற்று வருகின்றது.

    MORE
    GALLERIES

  • 35

    கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.... முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன..?

    இதே போன்று தன்னார்வ அமைப்புகள் சார்பிலும் நடமாடும் பரிசோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு மாநகராட்சியிடம் வழங்கப்பட உள்ளது. ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த  தன்னார்வலர் எட்வின்  என்பவர் ,  தன்னார்வ அமைப்புகளிடம் இருந்து பெற்ற உதவியின் மூலம் நடமாடும் பரிசோதனை மையத்தை ஏற்படுத்தியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 45

    கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.... முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன..?

    இந்த நடமாடும் பரிசோதனை மையம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டை விட்டு  பரிசோதனைக்ககாக வெளியில் வரமுடியாத நிலையில் இருக்கும் வயதானவர்கள் ஆகியோருக்கு வாகனத்தை நேரில் கொண்டு சென்று பரிசோதனை செய்ய  முடியும்.

    MORE
    GALLERIES

  • 55

    கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.... முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன..?

    அவ்வாறு பரிசோதனை செய்யும் ஊழியருக்கு முழு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வாகனத்தை வடிவமைத்து இருப்பதாகவும், இந்த வாகனத்திற்கான செலவுகள் அனைத்தும் தன்னார்வ அமைப்புகள் ஏற்றுக்கொள்ளும் எனவும் இந்த வாகனத்தை மாநகராட்சி அதிகாரிகளிடம் விரைவில் ஒப்படைக்க  இருப்பதாகவும்  தன்னார்வலர் எட்வின் தெரிவித்தார்.

    MORE
    GALLERIES