இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில், உயிரிழப்பு இரண்டாயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. (Reuters) மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், உயிரிழப்பு ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் பாதிப்பு பத்தாயிரத்தை கடந்துள்ள நிலையில், குஜராத்தில் பாதிப்பு பத்தாயிரத்தையும், டெல்லியில் ஒன்பதாயிரத்தையும் நெருங்கியுள்ளது. ராஜஸ்தானில் பாதிப்பு 4 ஆயிரத்து 727 ஆகவும், மத்திய பிரதேசத்தில் 4 ஆயிரத்து 595 ஆகவும் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.