இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், உயிரிழப்பு 1389 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 74 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 762 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை எட்டியுள்ளது. குஜராத்தில் பாதிப்பு 5,500ஐ நெருங்கியுள்ளது. டெல்லியில் பாதிப்பு 4 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூவாயிரத்து 500ஐ கடந்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாதிப்பு மூவாயிரத்தை நெருங்கியுள்ளது.