கொரோனாவால் மேலும் 85 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 9233-ஆக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 5612 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 448-ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும் 46336 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் ஒரே நாளில் 656 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். சேலத்தில் 296 பேருக்கும், திருவள்ளூரில் 235 பேருக்கும், கடலூரில் 212 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 259 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 34 ஆயிரத்தை கடந்தது.