உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.56 கோடியை கடந்துள்ளது. இதில் 1,79,00,000 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8,54,000மாக உள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 62 லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 499 பேர் உயிரிழந்தனர். இதற்கு அடுத்ததாக பிரேசிலில் 39,91,000 பேரும், ரஷ்யாவில் 9,95,000 பேரும், பெருவில் 6,47,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். (படம்: Reuters)