உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.58 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 1.81 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8,60,000ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,57,000ஆக உள்ளது. பிரேசிலில் பாதிப்பு 40,00,000ஐ நெருங்கி வரும் நிலையில், ரஷ்யாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,00,000ஐ தாண்டியது. பெருவில் ஆறரை லட்சம் பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.