உலகளவில் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.90 கோடியை நெருங்கியுள்ளது.. கடந்த 24 மணி நேரத்தில் 6,604 பேர் மரணமடைந்ததால், இறப்பு எண்ணிக்கை 7 ,10,000 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்ககாவில் தொற்று பாதிப்பு 50,00,000 நெருங்கியுள்ளது. அங்கு இதுவரை கொரோனா பெருந்தொற்றுக்கு 1,61,000பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசிலில் 28,62,000 பேரும், ரஷ்யாவில் 8,66,000 பேரும் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். உலகம் முழுவதும் குணமடைந்தோர் எண்ணிக்கை 1.21 கோடியாக உயர்ந்துள்ளது.