இந்தியாவில் புதிதாக ஒரே நாளில் 69, 921 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக 819 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36,91,167 ஆக உயர்ந்துள்ளது. 7,85,996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 28,39,883 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த உயிரிழப்புகள் 65,288 ஆக அதிகரித்துள்ளது. திங்களன்று மட்டும் நாடு முழுக்க 10,16,920 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை 4,33,24,834 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளன.