இந்தியாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நாள் கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்துக்கும் கீழ் சென்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55, 342 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 706 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 71,75,881 ஆக உயர்ந்துள்ளது. 8,38,729 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 62, 27, 296 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1, 09,856 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 8 கோடியே 89,45,107 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.