சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு குறைந்த கட்டணத்தில் சிகிச்சை அளித்து வந்தார். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு தொடங்கியதும் மருத்துவர் பூபதிராஜாவும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக தனது கிளினீக்கை மூடினார்.
கிளினீக்கை திறந்து சிகிச்சை அளிக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியதை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும் கிளினிக்கை திறந்தார். ஆனால் சிகிச்சைக்காக வருவோரிடம் மருத்துவ கட்டணம் வசூலிப்பதில்லை என முடிவு எடுத்து வரும் நோயாளிகளுக்கு சோதனை செய்து மருந்துகளை மட்டும் எழுதிக் கொடுத்து வருகிறார் .
இதுகுறித்து மருத்துவர் பூபதிராஜா கூறும் போது ஊரடங்கு நேரத்தில் மக்கள் வருமானமின்றி சிரமப்படுகின்றனர். அதனால் சிகிச்சைக்கு வருவோரிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் செல்வோர் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என கேட்டுக் கொண்டார் .