இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26567 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 97,03770 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 385 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 1,40,958 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். 3,83,866 பேர் பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,045 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 91,78,946 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.