முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » தமிழகத்தில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு

தமிழகத்தில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,00,000 கடந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,000ஐ தாண்டியுள்ளது.

 • 16

  தமிழகத்தில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு

  சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 5,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால், ஒட்டுமொத்த பாதிப்பு 3,02,815 ஆக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 26

  தமிழகத்தில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு

  சென்னையில் தொற்று குறைந்துவரும் நிலையில், ஜூன் 2-ம் தேதிக்குப் பின், தொடர்ந்து 4-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழாகவே தொற்று பாதிப்பு உள்ளது. சென்னையில் புதிதாக 976 பேர் உள்பட இதுவரை 1,10,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 36

  தமிழகத்தில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு

  சென்னையைத் தவிர்த்த பிற மாவட்டங்களில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் தேனி மாவட்டங்களில் ஒரே நாளில் தலா 390-க்கும் மேல் தொற்று உறுதியாகியுள்ளது. கோவை, கடலூரில் தலா 200-க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று உறுதியாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 46

  தமிழகத்தில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு

  சென்னையில்  25 பேர் உட்பட மாநிலம் முழுவதும் ஒரே நாளில் 114 பேர் உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 56

  தமிழகத்தில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு

  தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 6,037 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தோர் விகிதம் 80 சதவீதத்தை தாண்டி, மொத்த எண்ணிக்கை 2,44,675 ஆக அதிகரித்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 66

  தமிழகத்தில் 3 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு - 5 ஆயிரத்தை கடந்த உயிரிழப்பு

  தமிழகத்தில் ஒரே நாளில் 65, 141 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,74,849 ஆக உயர்ந்துள்ளது.

  MORE
  GALLERIES