சில மாத இடைவெளிக்கு பின் கோவிட்-19 பரவலை கட்டுப்படுத்தி கொரோனா தொற்றிலிருந்து உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க பெரிதும் உதவி வரும் முக்கிய தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக குறிப்பிட்ட இடைவெளியில் கைகளை சுத்தப்படுத்தி கொள்ளும் பழக்கம் உள்ளது. இருப்பினும், அடிக்கடி நம் கைகளை கழுவுவது மற்றும் சுத்திகரிப்பு ( sanitization) செய்வது கைகளை பெரிதும் வறட்சியடைய வைத்து, நம் கைகளை கடினமாக்குகிறது. கைகள் ட்ரை ஆகின்றன என்பதற்காக தொற்று தீவிரமடைந்துள்ள இந்த நேரத்தில்,மிகவும் அவசியமான பாதுகாப்பு நடவடிக்கை என்பதால் அடிக்கடி கைகளை கழுவுவதை தவிர்க்க முடியாது. எனினும் உலர்ந்த, கரடுமுரடான கைகளை தவிர்க்க சில எளிய மற்றும் பயனுள்ள வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
ஈரப்பதமாக்கி கொள்ளுங்கள் (moisturize) : தொடர்ந்து சோப்பு மற்றும் சானிடைசர் பயன்படுத்தி கைகள் கடினமாக இருந்தால் அதை சரி செய்வதற்கான முக்கியவழி மாய்சரைஸ் (moisturize) செய்வதே. உங்கள் கைகளை தொடர்ந்து ஈரப்பதமாக்குவது என்பது வறட்சியைத் தடுக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் நீண்ட நேரத்திற்கு கைகளை மிருதுவாக வைத்திருக்கும். ஷியா பட்டர்(shea butter) அல்லது பால் போன்ற மூலப்பொருட்களைக் கொண்ட ஒரு நல்ல ஹேண்ட் கிரீம் பயன்படுத்துவது உங்கள் கைகள் வழக்கமான சுத்திகரிப்பு நிலையில் வறண்டு போகாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான சிறந்த வழிகளில் ஒன்று.
மாய்சரைஸிங் கிரீமை முற்றிலும் உலர்ந்த கைகளை ஈரப்பதமாக்க பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்காது. உங்கள் கைகளை கழுவிய பின் ஓரளவு உலர்த்தி, லேசான ஈரமான கைகளில் உங்கள் மாய்சரைஸிங் ஹேண்ட் கிரீமை தடவ வேண்டும். உங்கள் கைகளை சுத்தமாக வைத்திருக்கவும், வறட்சியைத் தவிர்க்கவும் மாய்ஸ்சரைசர் அடிப்படையிலான சானிடைசரை வாங்கி பயன்படுத்தலாம்.
அழுத்தி துடைக்காதீர்கள் : உங்கள் கைகளை ஈரமாக வைத்திருந்தாலும், அது உங்கள் கைகளில் பாக்டீரியாவை விட்டுவிடுவதால் எதிர் உற்பத்தி செய்ய முடியும். ஈரத்தை துடைக்க உங்கள் கைகளை ஒரு துண்டை கொண்டு அழுத்தி தேய்ப்பதும் சருமம் வறண்டு, கரடுமுரடாக காரணமாகி விடும். எனவே உங்கள் கைகளை கழுவிய துண்டை எடுத்து அழுத்தி துடைக்காமல் மெதுவாக உலர வைக்கவும். இன்னும் குறிப்பாக சொன்னால் வறட்சியைத் தவிர்க்க உங்கள் கைகளை கழுவி, அவற்றை முழுவதுமாக உலர்த்துவதை விட, கையில் இருக்கும் தண்ணீரை உதறி லேசான ஈரத்துடன் கைகள் இருக்கும் போது,முன்பு குறிப்பிட்டபடி மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம்.
வெதுவெதுப்பான நீர் : உங்கள் கைகளை சுத்தப்படுத்துவதில் குளிர்ந்த நீர் மிகவும் பயனுள்ளதாக இல்லை என்றாலும், சூடான நீர் எதிர்பார்க்கும் பலனை தரும். நீங்கள் கைகளை கழுவும்போது சூடான அல்லது வெதுவெதுப்பான நீர் சிறப்பாக செயல்படும். உங்கள் கைகளை வெதுவெதுப்பான நீரில் நன்கு கழுவி பின் கைகளை மெதுவாக உலர வைத்து பின்னர் ஹேண்ட் கிரீம் தடவி வரலாம். இந்த எளிய உதவி குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் கைகளை சுத்தமாக, ஈரப்பதமாக மற்றும் மென்மையாக இருக்குமாறு பராமரிக்கலாம்.