கொரோனா கட்டுப்பாடுகளால் அடிப்படை திறன்களை இழக்கும் குழந்தைகள் - ஆய்வில் வெளியான தகவல் என்ன?
வறுமையில் வாடும் மாணவர்களுக்கும் தொற்று இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளிகளால் பெரும்பாலான குழந்தைகள் கல்வி அடிப்படையில் கணிசமாக பின்வாங்கப் போகிறார்கள் என்பது நிதர்சனம்.


கொரோனா வைரஸ் (COVID-19) தொற்றுநோய் உலகம் முழுவதும் அனைவருக்குமான பாடமாகியுள்ளது. எதை செய்வதாயினும் அதை வீட்டிற்குள்ளிருந்து செய்யுமாறு கொரோனா நம்மை முடங்கியுள்ளது. பள்ளிகள் மூடல், தொலைதூரத்தில் வேலை, உடல் மற்றும் மன ரீதியான சிக்கல் என பலவும் ஏற்பட்டுள்ள நிலையில் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றை இப்போது காண்போம்.


சில இளம் குழந்தைகள் சாப்பிட பயன்படுத்தும் கத்தி மற்றும் முட்கரண்டியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்துவிட்டார்கள், மேலும் கொரோனா வைரஸ் தொற்றால் தொடர்புடைய பள்ளி மூடல்கள் புதிதாக பள்ளி செல்லும் குழந்தைகளின் கற்றலை பாதிக்கக்கூடும் என்பதால் அவர்கள் கற்க வேண்டிய வயதில் கற்க முடியாமல் இருப்பதால் குழந்தைகளின் பெற்றோர்கள் திணறுவதாக UKவின் கல்வி கண்காணிப்புக் குழு கடந்த செவ்வாயன்று தெரிவித்துள்ளது.


Ofsted என அழைக்கப்படும் கல்வி, குழந்தை சேவைகள் மற்றும் திறன்களுக்கான தரநிலை அலுவலகம், செப்டம்பர் மாதத்திலிருந்து இங்கிலாந்து முழுவதும் உள்ள கல்வி மற்றும் சமூக பராமரிப்பு வழங்குநர்களுக்கு 900-க்கும் மேற்பட்ட வருகை கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் ஐந்து அறிக்கைகளை வெளியிட்டது.


தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளில் சிலர், அவர்களின் ஆரம்ப ஆண்டு கல்விக்காக போராடும் பெற்றோருடன் இருந்தவர்கள், அவர்கள் "பெற்றோருடன் குறைந்த நேரத்தையும் மற்ற குழந்தைகளுடன் குறைந்த நேரத்தையும் அனுபவித்தார்கள்" என்று தலைமை ஆய்வாளரான அமண்டா ஸ்பீல்மேன் கூறினார்.


டாய்லெட் பயிற்சி பெற்ற சில மாணவர்கள் மீண்டும் டயப்பர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் தெரிவித்ததாகவும், “சாப்பிட பயன்படுத்தும் கத்தி மற்றும் முட்கரண்டி கொண்டு சாப்பிடுவது போன்ற தேர்ச்சி பெற்ற சில அடிப்படை திறன்களை மறந்துவிட்ட குழந்தைகள், சொற்களிலும், எண்களிலும் ஆரம்பகால முன்னேற்றத்தை இழந்ததாக குறிப்பிட வேண்டாம்” என்றும் அவர் கூறினார்.


மற்ற சில குழந்தைகளில், சிலர் கணிதத்தில் பின்தங்கியிருப்பது, கல்வியறிவு மற்றும் படித்ததை கவனம் வைத்துக்கொள்வதில் சிரமப்படுதல் அல்லது உடல் ஆரோக்கியத்தை இழத்தல் போன்ற மற்ற காரணிகளை எதிர்கொண்டதாக அறிக்கை கூறுகிறது.


இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக கோன் (Kohn) கல்வி, மனித நடத்தை மற்றும் பெற்றோரைப் பற்றி எழுதுதல், பேசுதல், செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் என பலவற்றில் இது சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்கிறார். இந்த ஆண்டு கொரோனா தொற்றுநோயால் பள்ளிகள் மூடப்பட்டது, வறுமையில் வாடும் மாணவர்களுக்கும் தொற்று இல்லாதவர்களுக்கும் இடையிலான இடைவெளிகளால் பெரும்பாலான குழந்தைகள் கல்வி அடிப்படையில் கணிசமாக பின்வாங்கப் போகிறார்கள் என்பது நிதர்சனம்.


“அளவீட்டுக்கு அப்பாற்பட்ட பள்ளிக்கல்வி மற்றும் கல்வியைப் பற்றிய பிற வழக்கத்திற்கு மாறான கட்டுரைகள்”, (Schooling Beyond Measure and Other Unorthodox Essays About Education) இது நாட்டின் கல்வி குறித்த வழக்கமான ஞானத்தை சவால் செய்கிறது. சில குழந்தைகள் மன உளைச்சலுக்கான அறிகுறிகளைக் காட்டியதாகவும் இதனால் அதிகரித்த உணவுக் கோளாறுகள் மற்றும் சுய-தீங்கு ஆகியவற்றை அவர்கள் பெற்றதாகவும் அறிக்கை கூறுகிறது.


மார்ச் முதல் பெரும்பாலான குழந்தைகள் தங்கள் கற்றலில் பல்வேறு நிலைகளை இழந்துவிட்டாலும், சிலர் பெற்றோர்களிடமும் பராமரிப்பாளர்களுடனும் தரமான நேரத்தை செலவிட்டதால் சிலர் நன்றாக நேரத்தை பயன்படுத்தியாக, ஸ்பீல்மேன் கூறினார். கொரோனா வைரஸ் தொற்று முதன்முதலில் பிரிட்டனை கடுமையாக தாக்கியதால், மார்ச் மாதத்தில் பள்ளிகள் மற்றும் குழந்தை பராமரிப்பு அமைப்புகள் பெரும்பாலும் மூடப்பட்டிருந்தது.


செப்டம்பர் மாதத்திலிருந்து, இங்கிலாந்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் நேரிடையாக வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளனர். கடந்த வாரம் இங்கிலாந்தில் ஒரு புதிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இருப்பினும் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டன.


தொற்றுநோய்களின் போது பள்ளிகளுக்கு குழந்தைகள் தொடர்ந்து செல்வது பற்றிய நடைமுறை சிக்கல்கள், பாதுகாப்பு வழிமுறைகளை இயக்குவது மற்றும் கோவிட் பரவலுக்கு பதிலளிப்பது போன்றவை சிக்கல் நிறைந்தது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


பள்ளி கல்வி சார்ந்து அரசு பலமுறை அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. ASCL தலைமை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜியோஃப் பார்டன், அரசின் அறிக்கைகள் "பள்ளி மூடல்களின் கல்வி மற்றும் உணர்ச்சி ரீதியான தாக்கத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது, மேலும் பள்ளிகளைத் திறந்து வைக்க நாம் எல்லாவற்றையும் செய்ய வேண்டும்" என்றும் கூறினார்.