சீனாவின் ஊஹான் பகுதியில் கடந்தாண்டு டிசம்பர் இறுதியில் கொரோனா என்ற வைரஸ் மனிதர்களுக்கு பரவியது. எளிதில் தொற்றக் கூடிய இந்த வைரஸ் உலக அளவில் பல நாடுகளுக்கும் பரவியது. தற்போது வரை கிட்டத்தட்ட உயிரிழப்பு 500-ஐ நெருங்கியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பை சர்வதேச நெருக்கடி நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. இந்தியாவிலும் இருவருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.