ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வௌயாகி உள்ளது. 13-வது ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க இருந்த நிலையில், 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக போட்டிகள் ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், பஞ்சாப், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பதாக கூறியுள்ளன. இதே போல நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் ஐபிஎல் தற்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதே போல நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் ஐபிஎல் தற்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்பட்டால் மூவாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் போட்டி ரத்து செய்யப்படாது என்றும் பிசிசிஐ அதிகாரி கூறியுள்ளார்.