மெக்சிக்கோவில் சரணாலயம் ஒன்றில் பிறந்த புலி குட்டிக்கு கோவிட் என பெயரிடப்பட்டுள்ளது. மெக்சிக்கோவின் கோர்டபா நகரில் பயோ ஜூ என்ற தனியார் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தில் உள்ள 8 வயது பெண் புலி கடந்த 14-ஆம் தேதி குட்டி ஈன்றது. இந்த குட்டிக்கு கொரோனா வைரஸை நினைவூட்டும் வகையில் கோவிட் என பெயர்சூட்டப்பட்டுள்ளது. மேலும் மெக்சிக்கோவில் தற்போது வரை 475 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த புலி குட்டிக்கு கோவிட் என பெயர்சூட்டியத்தற்கு பிறகு கொரோனா வைரஸ் தாக்கம் குறையும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக மக்கள் நம்புகின்றனர்.