முகப்பு » புகைப்பட செய்தி » கொரோனா » கொரோனா: டெல்லியில் 10,000 படுக்கைகளுடன் தயாராகும் உலகின் பிரமாண்டமான தற்காலிக மருத்துவமனை

கொரோனா: டெல்லியில் 10,000 படுக்கைகளுடன் தயாராகும் உலகின் பிரமாண்டமான தற்காலிக மருத்துவமனை

கொரோனா சிகிச்சைக்காக டெல்லியில் 10,000 படுக்கைகளுடன் உலகின் பிரமாண்டமான தற்காலிக மருத்துவமனை தயாராகி வருகிறது.

 • 14

  கொரோனா: டெல்லியில் 10,000 படுக்கைகளுடன் தயாராகும் உலகின் பிரமாண்டமான தற்காலிக மருத்துவமனை

  கொரோனாவை எதிர்கொள்வதற்காக சத்தர்பூர் பகுதியில் உருவாக்கப்பட்டு வரும் இந்த பிரமாண்டமான தற்காலிக மருத்துவமனையில் 10 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுமார் ஆயிரம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை 18 ஆயிரம் டன் ஏசி.யால் குளிரூட்டப்பட உள்ளது.

  MORE
  GALLERIES

 • 24

  கொரோனா: டெல்லியில் 10,000 படுக்கைகளுடன் தயாராகும் உலகின் பிரமாண்டமான தற்காலிக மருத்துவமனை

  உலகில் கொரோனாவுக்காக உருவாக்கப்பட்ட தற்காலிக மருத்துவமனைகளில் மிகப் பெரியதான இந்த மருத்துவமனை, 22 கால்பந்து மைதானங்களுக்கு சமமான பரப்பை கொண்டதாகும். இங்கு 800 மருத்துவர்கள் மற்றும் சுமார் 1,400 செவிலியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 34

  கொரோனா: டெல்லியில் 10,000 படுக்கைகளுடன் தயாராகும் உலகின் பிரமாண்டமான தற்காலிக மருத்துவமனை

  கொரோனாவுக்கான அந்த மருத்துவமனையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முதல்வர் கெஜ்ரிவாலும் பார்வையிட்டனர். முன்னதாக, டெல்லியின் லோக் நாயக் மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஷெனாய் ஹாலில் 100 படுக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை கெஜ்ரிவால் பார்வையிட்டார்.

  MORE
  GALLERIES

 • 44

  கொரோனா: டெல்லியில் 10,000 படுக்கைகளுடன் தயாராகும் உலகின் பிரமாண்டமான தற்காலிக மருத்துவமனை

  ஜூலை மாதம் செயல்பட உள்ள இந்த பிரமாண்ட மருத்துவமனைக்கு சர்தார் வல்லபாய் படேல் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES