கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அனைவரையும் வீடுகளில் இருக்குமாறு அரசு கூறியுள்ள சூழலில், சென்னை எப்படி இருக்கிறது? 21 நாள் ஊரடங்கு இன்று தொடங்கியுள்ளது. எப்போதும் வாகன நெரிசல் இருக்கும் சென்னையின் பகுதிகள் இன்று, வெற்று சாலைகளாக காட்சியளிக்கின்றன. தங்கள் வீடுகளிலேயே மக்கள் இருப்பதால் பிரதான சாலைகள் அனைத்தும் ஆரவாரமின்றி காணப்படுகின்றன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், முழு அடைப்புக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.