கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக நாமக்கலில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வெற்றி விகாஸ் தனியார் பள்ளிகளும் 100 படுக்கை வசதிகளுடன் தயாராகி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் கொரோனா வைரஸ் தொற்று இருக்க வாய்ப்பு உள்ளது. அவர்களை வீட்டில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அவர்கள் வெளியே நடமாடுவதால் மற்றவர்களுக்கு பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்களை இந்த மருத்துவ சிறப்பு முகாமிற்கு அழைத்து வந்து தனிமைப்படுத்தவே இந்த முகாம்கள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கபடுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.