அன்று முதல் பல தலைமுறைகளை கடந்தும் தொடர்ந்து பொங்கல் பண்டிகையின் போது இந்த தெருகூத்து நாடகம் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். முதல் நாள் மாலை 6 மணிக்கு துவங்கும் இரண்ய நாடக தெருக்கூத்து இரவு முழுவதும் தொடர்ந்து அடுத்த நாள் காலை சூர்ய உதயத்திற்கு பின்பு இரண்யன் கொல்லபட்டு இறைவன் கோபம் தணிந்த பின்னரே இந்நிகழ்ச்சி நிறைவடைகிறது.
முழுக்க முழுக்க பகதூர் கிராமத்தினரே இத்தெருக்கூத்தில் வேடமிட்டு நடிப்பதும், இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் இந்தியாவின் எந்த பகுதியில் வேலை நிமித்தமாக இருந்தாலும் சரி, அல்லது வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தாலும் இத்தெருக்கூத்து நடத்தப்படும் நாளில் தவறாமல் தங்களது கிராமத்தை வந்தடைந்து இக்கூத்தில் பங்கெடுப்பது தனிச்சிறப்பு.
இதனை உறுதிபடுத்தும் விதமாக சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை வெட்டவெளியில் கொட்டும் பனியினையும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஊர் மக்கள் அனைவரும் இத்தெருகூத்தை விடிய விடிய கண்டு ரசித்ததே தெளிவுபட உணர்த்தியது. இவர்களின் அசையாத நம்பிக்கை இன்று வரை ஒரு தொன்மையான கலையினை வாழவைத்து கொண்டிருகிறது.