முகப்பு » புகைப்பட செய்தி » கோயம்புத்தூர் » பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

கோவை மக்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய காஸ் வன அருங்காட்சியகம்! அருங்காட்சியகத்தின் உள்ளே அத்தனை சிறப்புகள்! செய்தியாளர் : ஜெரால்ட் (கோயம்பத்தூர்)

 • 113

  பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

  ஆர்.எஸ் புரம் அருகே வனத்துறை அலுவலக வளாகத்தில் காஸ் வன அருங்காட்சியகம் பல்வேறு சிறப்புகளுடன் இந்திய வனத்தின் வரலாற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 213

  பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

  கோவை ஆர்.எஸ் புரம் அருகே உள்ள கெளலி பிரவுன் சாலையில் இருக்கும் வனத்துறை அலுவலக வளாகத்தில் காஸ் ஃபாரஸ்ட் மியூசியம் செயல்பட்டு வருகிறது. 1902-ல் தொடங்கப்பட்ட இந்த காஸ் மியூசியம், இந்திய வன அருங்காட்சியங்களுள் பெரியதும் மிகப் பழைமையும்மானது.

  MORE
  GALLERIES

 • 313

  பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

  ஹோரேஸ் அரிச்சிபால்ட் காஸ் என்னும் தனி மனிதரின் முயற்சியில் உருவான இந்த மியூசியம் இந்தியவனத்துறையின் பல்வேறு அம்சங்களை விரிவான சேகரிப்புடன் காண்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 413

  பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

  இந்த அருங்காட்சியகத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இங்கு காலை 9 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 513

  பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

  இந்திய வனம் என்றால் என்ன என்ற கேள்விக்கு இரண்டு மூன்று மணி நேரத்தில் காட்சியே பதிலாக அமையும் படி இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES

 • 613

  பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

  குறிப்பாக இதில் சாதாரண தாவரத்திலிருந்து உயர்ந்தோங்கிய மரம் வரை, சாதாரண சிறு பல்லி முட்டையிலிருந்து உலகின் மிகப்பெரிய முட்டைகள் வரை, விதை முதல் மரத்தின் பல வகைகள் வரை, யானையின் எலும்பு கூடுகள் முதல் யானையின் சிறு கருக்கள் வரை என பல வகையான உயிர் வாழ்ந்த விலங்குகள் இந்த அருங்காட்சியகத்தில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 713

  பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

  இதில் அருங்காட்சியகத்தின் நடுவே, பிரமாண்டமாக இந்தியன் பைசன் முழு உருவம் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆங்கிலேயர் காலத்தில் வனங்களில் சுற்றித் திரிந்த சிறுத்தை யானை போன்றவற்றின் உடல் உறுப்பு பாகங்கள் மற்றும் உருவங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 813

  பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

  456 ஆண்டு பழமையான தேக்கு மரம், பழமையான செம்மரம், சந்தன மரம் ஆகியவையும் இதுவரை நாம் கேள்விப்பட்டிடாத பல மரங்களின் மரத் துண்டுகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 913

  பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

  அதேபோல பல வகையான விதைகளும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் 2 கிலோ 60 கிராம் எடை கொண்ட பெரிய அளவிலான பனை விதை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 1013

  பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

  அதேபோல வனவிலங்கு வேட்டைகள் தடை செய்யப்படுவதற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட பழமையான வில், அம்பு, கோடாரி போன்ற பல வகையான இரும்பு ஆயுதங்கள் மற்றும் பல வகையான நாட்டு  துப்பாக்கிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 1113

  பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

  அதேபோல மூன்று கொம்புகள் உடைய மானின் கொம்பு மற்றும் உருவ அமைப்புகள் மற்றும் பல வகையான கொம்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 1213

  பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

  மேலும் பல வகையான பாம்புகள், இறந்த யானைகள் ஆகியவை பதப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 1313

  பல்லி முட்டை முதல் யானையின் எலும்புக்கூடுகள் வரை... கோவை அருங்காட்சியத்தில் என்னவெல்லாம் இருக்கு தெரியுமா?

  மியூசியத்தின் சுவர்களை சுற்றியும் வேட்டையாடப்பட்ட ஆடு, மாடு, பல வகையான மான்கள், காட்டெருமை போன்றவற்றின் பதப்படுத்தப்பட்ட தலை உருவங்கள், நட்சத்திர மீன்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES