முதல் கட்டமாக உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் தூண்களில் வண்ண ஓவியங்கள் வரையும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. வனவிலங்குகள், இயற்கை காட்சிகள், பறவைகள் உள்ளிட்ட பல வண்ணங்களில் இந்த ஓவியங்களானது வரையப்பட்டு வருகிறது. தூண்களில் சினிமா போஸ்டர்களையே பார்த்து பழகிய பொதுமக்கள் , தூண்கள் வண்ணமயமாக காட்சியளிப்பதை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.