கோவை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கோவை குற்றாலம் அருவி உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்த கனமழை காரணமாக, கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மழை குறைந்ததால் கோவை குற்றால அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.
அவர்கள் அங்கு உள்ள அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அதில் ஆயுதபூஜையன்று மட்டும் 965 பெரியவர்கள், 198 குழந்தைகள் என 1,163 சுற்றுலா பயணிகள் கோவை குற்றாலத்தில் குளித்து மகிழ்ந்துள்ளனர். மேலும் இந்த வாரத்தில் சனி, ஞாயிறு உள்ளிட்ட விடுமுறை தினங்களும் அடுத்து அடுத்து வருவதால் சுற்றுலா பயணிகள் இங்கு குளித்து மகிழலாம்.