யானை பொங்கல் தெரியுமா? டாப்சிலிப் பகுதியில் காலம் காலமாக கொண்டாடப்படும் பொங்கல் விழா!
Pollachi Pongal Festival | பொள்ளாச்சி டாப்ஸ்லிப் அடுத்துள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானைகளுக்கு பொட்டுகள் வைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
பொள்ளாச்சி டாப்ஸ்லிப் அடுத்துள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
2/ 6
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்சிலிப் கோழி கமுத்தி யானைகள் முகாமில் வனத்துறையினரால் 26 யானைகள் பராமரிக்கப்பட்டுன்றன
3/ 6
வனத்திற்கும், வனத்துறையினரின் பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் யானைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ஆண்டு தோறும் யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
4/ 6
இதன் படி இந்தாண்டு டாப்ஸ்லிப் அடுத்துள்ள கோழிகமுத்தி யானைகள் முகாமில் ஏற்பாடு செய்யபட்டிருந்த யானை பொங்கல் விழாவில் காலை யானைகளை குளிப்பாட்டி, யானைகளுக்கு பொட்டுவைக்கப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
5/ 6
பின்பு அங்குள்ள விநாயகர் கோவிலுக்கு சென்ற யானைகள் விநாயகர் முன்பு மண்டியிட்டு சாமி தரிசனம் செய்யப்பட்டது.
6/ 6
மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்படி மண்பானையில் பொங்கல் வைத்தனர். பின்னர் யானைகளுக்கு பிடித்த உணவான கரும்பு வாழை, மற்றும் ஒவ்வொரு யானைக்கும், கொள்ளு, ராகி, அரிசி சாதம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது.