இங்கே, சிவன் பஞ்சலிங்கேசனாக ஆறடி அகலமுள்ள சிறிய குகையில் அருள் புரிகிறார். தென் கைலாயம் என்று அழைப்படும் இந்த வெள்ளியங்கிரியில் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கிறார்.
ஏழுமலை என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது திருப்பதி திருமலைதான். ஆனால் சைவக் கடவுளான சிவபெருமானுக்கும் ஏழுமலை திருத்தலமாக திகழ்கிறது வெள்ளியங்கிரி மலைக்கோவில்.
நீண்ட பயணம் என்பதால், உடல் பலம் கொண்டவர்களால் மட்டுமே இந்த யாத்திரையை மேற்கொள்ள முடியும். இத்ந பயணத்தில் முதல் மற்றும் ஏழாவது மலை பயணம் சற்றே கடினமானதாக இருக்கும்.
இந்த வெள்ளியங்கிரி மலைப் பயணத்தின் போது மூலிகை நிறைந்த காற்றை சுவாசிக்கலாம். அத்துடன் மூலிகை கலந்து வரும் சுனை நீரையும் அருந்தலாம் என்று சொல்லப்படுகிறது. வழியில் பாம்பாட்டி சித்தர் குகையை பார்க்கலாம்.