மலைப்பிரதேசங்களில் காணப்படும் இவ்வகை பாம்புகள் ஒன்று முதல் மூன்று அடி நீளம் வரை வளரக்கூடியதாகும். இந்த பாம்பில் உள்ள விஷம் மனிதர்களை பாதிக்காது. பறவைகள் மற்றும் சிறு பூச்சியினங்களை உண்பதற்கு மட்டுமே இதன் விஷம் பயன்படும். இந்த வகை பாம்புகள் உயரமான மரக்கிளையிலிருந்து கீழே குதிக்கும். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவும் திறமை கொண்டது. இப்படி தாவிவிடுவதாலேயே இதனை பறக்கும் பாம்புகள் என்று அழைக்கிறோம்.